jd vance screenshot
இந்தியா

"எனது இந்திய மாமனார், மாமியார், மனைவி.." வார்த்தைகளை திரும்பப்பெற்ற அமெரிக்க துணை அதிபர்!

எச்-1பி தொழிலாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்துக்கு எழுந்த இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து வார்த்தைகளைத் திரும்பப் பெற்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

Rishan Vengai

இந்தியாவின் கண்டனத்திற்குப் பிறகு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது வார்த்தைகளை திரும்பப்பெற்று, புலம்பெயர்ந்தோரை சிறுமைப்படுத்தும் நோக்கம் இல்லையென விளக்கம் அளித்தார்.

தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த தனது மாமனார், மாமியார் மற்றும் மனைவி உஷா வான்ஸ் ஆகியோரை மிகவும் நேசிப்பதாகவும், புலம்பெயர்ந்தோரை சிறுமைப்படுத்துவது தனது நோக்கமல்ல என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை ஒப்பந்தக் கூலிகள் எனக் குறிப்பிட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது வார்த்தைப் பயன்பாடு குறைபாடுடையதாக இருக்கலாம், ஆனால் எச்-1பி விசா முறையை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி இந்திய ஊழியர்களைக் குறைந்த ஊதியம் கொடுத்து சுரண்டுவதையே சுட்டிக்காட்டியதாக வான்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.