மனைவியுடன், சிவ்ராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளம்
இந்தியா

விமானத்தைப் பிடிக்க அவசரம்.. மனைவியை மறந்த மத்திய அமைச்சர்!

மனைவியை மறந்துவிட்டு ராஜ்கோட் செல்ல பறந்திருக்கிறார் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

PT WEB

மனைவியை மறந்துவிட்டு ராஜ்கோட் செல்ல பறந்திருக்கிறார் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான். சுவாமி தரிசனம், அலுவலக பணி என இரண்டிற்கும் சேர்த்து செல்ல மனைவி சாதனாவையும் அழைத்துக்கொண்டு குஜராத் சென்றிருக்கிறார் மத்திய அமைச்சர். தேசிய கிர் பூங்கா, சோம்நாத் ஜோதிர்லிங்கத்தையும் தரிசித்துவிட்டு, நிலக்கடலை ஆய்வு மையத்தில் விவசாயிகளை சந்திக்க ஜூனாகத் சென்றிருக்கிறார்.

மனைவியுடன் சிவ்ராஜ் சிங் சவுகான்

அங்கு, காத்திருப்பு அறையில் மனைவியை அமர வைத்துவிட்டு, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ராஜ்கோட் செல்லும் அவசரத்தில் விமானத்தை பிடிக்க வேகமாக சென்றிருக்கிறார். சவுகானின் அவசரத்தை பார்த்து அவருடன் வந்த 22 கார்கள் அடங்கிய கான்வாயும் ராஜ்கோட் நோக்கி சீறிப்பாய்ந்தன. மனைவியை மறந்து வந்தது நினைவுக்கு வந்த நிலையில், பதறிப்போன மத்திய அமைச்சர் மீண்டும் ஜூனாகத் சென்றிருக்கிறார். மனைவியை ஒருவழியாக சமாளித்து பின் அவரையும் அழைத்துக்கொண்டு ராஜ்கோட் சென்றிருக்கிறார் மத்திய அமைச்சர்.