Headlines Facebook
இந்தியா

Headlines | டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம் முதல் சிவகார்த்திகேயன் கொடுத்த நிவாரண நிதி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி முதல் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நிவாரண நிதி வரை பல முக்கிய செய்திகள விவரிக்கிறது.

PT WEB
  • மழை பாதிப்பு தொடர்பாக அவதூறு பரப்பி சிலர் மலிவான அரசியல் செய்து வருகின்றனர் எனவும், அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

  • மானாமதுரை அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்ததாக இபிஎஸ் குற்றச்சாட்டு. இந்நிலையில், இதற்கு, ஜெனரேட்டர் பழுதாகி விட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.

EPS
  • மாணவர்கள் மீது பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் சென்னை ஐஐடி வனவானி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்.

  • புதுச்சேரி - கடலூர் இடையிலான சாலை வெள்ளத்தால் சேதம். விரிசல் ஏற்பட்டு உள்வாங்கியதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்.

பழனி முருகன் கோவில்
  • பழநி மூலவர் திருமேனி நன்றாக இருப்பதாக நீதியரசர் பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்புக் குழு தகவல்.. நவபாஷாண சிலையின் உறுதித் தன்மை குறித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

  • சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து தலையில் விழுந்ததில் இளைஞர் பலி. ரத்த வெள்ளத்தில் மயங்கிய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனினறி உயிரிழப்பு.

  • திண்டுக்கல் அருகே புதைக்கப்பட்ட சடலங்களுடன் மணலை கொள்ளையடித்து சென்றதாக கிராம மக்கள் புகார். இந்நிலையில், மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்.

  • கனமழை காரணமாக முழு கொள்ளளவை ஏட்டிய வேடந்தாங்கல் ஏரி. பல்வேறு நாடுகளில் இருந்து குவியத்தொடங்கிய வண்ணவண்ணப்பறவைகள்.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 ஏக்கருக்கும் மேல் உளுந்து பயிர் மழை நீரில் மூழ்கி சேதம். இந்நிலையில், இதற்கு, உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

  • நடிகர் மன்சூர் அலிகானின் மகன் சென்னை புழல் சிறையில் அடைப்பு. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைதான நிலையில் நடவடிக்கை.

  • மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்பு. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ்
  • முதலமைச்சராக இருந்த போது மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது என டெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

  • அசாம் மாநிலத்தில் உணவு விடுதிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி விநியோகிக்க தடை என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவிப்பு.

  • விண்ணில் பாயவிருந்த பிஎஸ்எல்வி சி 59 ராக்கெட் கடைசி நேரத்தில் நிறுத்தம். ஐரோப்பிய செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ராக்கெட் இன்று ஏவப்படுவதாக அறிவிப்பு.

  • ரயில் பயணிகளுக்கு மானியமாக ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல். 100 ரூபாய் பயணக்கட்டணத்தில் 54 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் விளக்கம்.

  • மழை பாதிப்பு நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

  • அமரன் படத்தில் தனது கைபேசி எண்ணை பயன்படுத்தியதற்காக1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

அமரன்
  • பிரான்சில் பிரதமர் மைக்கேல் பார்னியர் (MICHAEL BARNIER) தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி. பிரதமர் ராஜிநாமா செய்த நிலையில் தீவிரமடையும் பட்ஜெட் நெருக்கடி.

  • வங்கதேசத்தில் இனப்படுகொலை செய்ய முனைந்துள்ளார் முகமது யூனுஸ் என அமெரிக்காவில் உள்ள தனது ஆதரவாளர்கள் மத்தியில் காணொளி முறையில் பேசிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றச்சாட்டு.

  • உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 8ஆவது போட்டியும் டிரா. இந்தியாவின் குகேஷும் சீனாவின் டிங் லிரனும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை.