இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | சென்னையில் வாக்கு சேகரித்த பிரதமர் முதல் நாளைய ரமலான் பண்டிகை வரை!

PT WEB
  • பாஜகவுக்கு ஆதரவாக சென்னையில் ஊர்வலமாக வாகன பேரணி சென்று பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை பிரதமர் நரேந்திரமோடி வாக்குவேட்டையில் ஈடுபட்டார்.

  • “சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள மக்கள் ஆதரவை காட்டுகிறது” என சாலை பேரணி குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவு.

  • “தேர்தல் சீசனுக்கு மட்டும் வருவதற்கு தமிழ்நாடு என்ன சரணாலயமா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • தேர்தல் பத்திரம் மூலம் திமுக பெற்ற பணம் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என திண்டுக்கல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமிபேச்சு.

எடப்பாடி பழனிசாமி
  • இபிஎஸ் இடமிருந்து அதிமுகவை மீட்கவே ஓபிஎஸ்-ம் தானும் கூட்டணி வைத்துள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.

  • மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும் என சேலம் பரப்புரையில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு.

  • பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு விரட்டியடிக்கும் என திருச்சி பரப்புரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு.

  • அதிகார பலம், பணபலத்தை வைத்து கள்ள ஓட்டு போட திமுக முயற்சிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

  • விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் பொன்முடி வாக்குசேகரிப்பு. பரப்புரையின்போது வாகனத்தில் நடனமாடி உற்சாகம்.

  • சிதம்பரத்தில் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் இரண்டரை மணிநேரத்திற்கு மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்.

திருமாவளவன்
  • அமைச்சர் உதயநிதி பரப்புரைக்கு மக்களை ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, 20-க்கு மேற்பட்டோர் காயம்.

  • தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவிப்பு.

  • மறைந்த ஆர். எம். வீரப்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி. ஆர்.எம்.வீரப்பன் மறைவு வேதனையளிப்பதாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி இரங்கல்.

  • சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் அமீர் தொடர்புடைய இடங்களிலும் பிரபல உணவகம் உட்பட 35-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை விடியவிடிய சோதனை நடத்தியது.

  • தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 200 கோடி ஹவாலா பணத்தை பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டதில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த ஹவாலா தரகர் அமலாக்கத்துறையிடம் சிக்கினார்.

  • மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை திருவாரூர் மாவட்டத்திற்குள் புகுந்ததாக வதந்தி பரவிய நிலையில், அப்படி ஏதும் இல்லை என வனத்துறை விளக்கம்.

  • கோவில்பட்டி அருகே சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு. மேலும் நாகை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தாய் -மகள் உயிரிழந்த சோகம்.

  • மக்களவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் 17, 18ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

  • கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பரப்புரையில் இடுப்பில் துப்பாக்கியுடன் வந்து மாலை அணிவித்த காங்கிரஸ் தொண்டர்.

  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த மனு தள்ளுபடி. கைது நடவடிக்கை சட்டவிரோதமல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து என தவறாக தகவல் பரவியதால் பரபரப்பு... வதந்தி என அறியாமல் 7 வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் சென்றுவிட்டதால் பரபரப்பு.

  • கென்யாவில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டதில் 51 பயணிகள் பாதுகாப்பு.

  • ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட பஞ்சாப் அணி. இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி.

  • நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத ராஜஸ்தானுடன் குஜராத் அணி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை.

  • பணப்பிரச்னையால் பிரிந்த நடிகர்கள் சூரி மற்றும் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்தனர். ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் நெகிழ்ச்சி.