கிளி ஜோதிடம் பார்த்த தங்கர் பச்சான்
கிளி ஜோதிடம் பார்த்த தங்கர் பச்சான்pt web

"எங்க பிழைப்பே போச்சு" - தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்தவருக்கு வந்த சிக்கல்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஜோசியம், பார்த்த பச்சைக் கிளிகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Published on

கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சான் தென்னம்பாக்கத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் எதிரே உள்ள இடத்தில் கிளி ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது அந்த கிளி ஜோசியர் "உங்களுக்கு அழகுமுத்து அய்யனார் வந்துள்ளது. உங்கள் வெற்றி நிச்சயம்" என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கடலூர் வனத்துறையினர் கிளி ஜோசியம் பார்க்க வந்த இரண்டு போரையும் அழைத்து வந்து, அவர்கள் வைத்திருந்த கிளிகளைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பல ஆண்டுகளாகக் கிளி ஜோசியம் பார்த்து, பிழைப்பு நடத்தி வந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த கிளிகள் பறிமுதல் செய்யட்டப்பட்டதால் அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பிச் சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com