இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் முதல் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி வரை

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் விவசாயிகள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பார்க்கப் படுகிறது.

  • ஒன்றரை லட்சம் ஏழைகளை வறுமையிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத்திட்டம் அறிமுகம். 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

  • உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம். மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்
  • அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. ஆயிரம் மாணவர்களுக்கு குடிமைப்பணித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.

  • மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவாக்கம். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 13,720 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாற்றுப் பாலினத்தவரின் அனைத்துக்கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் அமைகிறது விண்வெளி தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “அரசின் கனவு நனவாக வேண்டும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பிலும் ஈரமுள்ளது, இதயமுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.

  • தமிழக பட்ஜெட் கானல் நீர் போன்று இருக்கிறது. வளர்ச்சித் திட்டம் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • “திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் எடப்பாடி பழனிசாமி, மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.

  • “ஒவ்வொருவர் பெயரிலும் 1,20,000 ரூபாய் கடன் இருக்கிறது. எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி.

அன்புமணி ராமதாஸ்
  • மக்களவை தேர்தலில் கேரளாவில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் பாஜகவும் அதிக தொகுதிகளை பெறும் என புதிய தலைமுறை தி ஃபெடரல் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்.

  • சென்னை கொடுங்கையூரில் திமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மமக நிர்வாகியை தாக்கியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

  • சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரை தாக்கிய சம்பவத்தால் கோயம்பேடு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

  • பாஜகவின் பிள்ளை பிடிக்கும் வேலை விஜயதாரணியிடம் பலிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.

  • திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வாய்ப்பு என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.

  • இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இலக்கு என்றும் கட்சி பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் தகவல்

புஸ்ஸி ஆனந்த், விஜய்
  • சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசியர்கள் கைது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்.

  • மக்களவை தேர்தலின் வெற்றியை நோக்கிய பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் விரைவில் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.

  • மீனவர்களிடம் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. இலங்கை நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை இன்று பேரணி நடத்த திட்டம்.

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மதுரையில் சிகை தானம் செய்த கல்லூரி மாணவிகள்.

  • அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

  • மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி.

  • “வாக்குச் சீட்டில் எழுதும்போது கேமராவை பார்த்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.

  • மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்த விவசாய சங்கங்கள். நாளை முதல் டெல்லியை நோக்கி பேரணி தொடரும் என திட்டவட்டம்.