உலக செஸ் சாம்பியன் குகேஷ் - மழை புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள்: புது வரலாற்றை எழுதிய குகேஷ் முதல் தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கிய மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை முதல் லிப்டுக்குள் சிக்கி பலியான 7 பேர் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவியில் நீர் காட்டாற்று வெள்ளமாக பெருகியுள்ளது.

  • தென்காசி, சங்கரன்கோயில், செங்கோட்டை பகுதிகளில் கனமழை தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம். இன்று மாலை நடைபெற உள்ள மகாதீப நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைப்பெற்றுள்ளது.

  • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு.

  • கனமழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • கனமழை காரணமாக நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தென்காசி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

  • தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை.

  • திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது லிப்டுக்குள் சிக்கிக்கொண்ட 7 பேர் உயிரிழப்பு. கவலைக்கிடமான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை.

  • உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றார் தமிழக வீரர் குகேஷ். சீன வீரர் டிங் லீரெனை வீழ்த்தி அபாரம்.

  • மிக இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்
  • தொய்வடையும் போதெல்லாம் கோடிக்கணக்கான இந்தியர்களை நினைத்துக் கொள்வேன் என சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் நெகிழ்ச்சி.

  • கடின உழைப்பு, ஒப்பற்ற திறமைக்கு கிடைத்த வெற்றி என குகேஷ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து. குகேஷை எண்ணி தமிழகம் பெருமை கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.

  • விசிக கொடிகம்ப விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட மூவரின் பணி இடைநீக்க நடவடிக்கை ரத்து.

  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு.

  • மத வழிபாட்டு தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை. ஏற்கனவே விசாரணையில் உள்ள வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பிக்கவும் தடை விதிப்பு.