புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், பிஹாரில் நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள்... சேலத்தில் பாமக மோதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை... தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை... சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டிய கிரிக்கெட் வீரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை... உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.
பிஹார் சட்டமன்றத்திற்கு நாளை நடைபெறுகிறது முதற்கட்ட தேர்தல்... இறுதிக்கட்ட வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள்...
தேர்தல் பரப்புரையில் தந்தை லாலுவுக்கு மகன் தேஜஸ்வி முக்கியத்துவம் தரவில்லை என பிரதமர் மோடி பேச்சு... போஸ்டர்களில் லாலு படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் விமர்சனம்..
பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் நிறுவனங்கள், அரசு நிர்வாகங்களில் பிரதிநிதித்துவம் இல்லை... 10 சதவீத மக்கள் மட்டுமே முக்கிய நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாக பிஹார் பரப்புரையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...
ராணுவத்தை சாதியின் பெயரால் பிளவுபடுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பொறுப்பற்ற முறையில் பேசியதாக பாஜக விமர்சனம்... இந்திய நாடு மீதான ராகுலின் வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு...
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரம்... வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள்...
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து... குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக உறுதி...
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்... மதுக்கரையில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கி நூதன முறையில் எதிர்ப்பு...
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணை யாரும் விமர்சிக்க வேண்டாம்.... எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என மாநகர காவல் ஆணையர் பேட்டி...
மீண்டும் திமுகவின் துணை பொதுச்செயலரானார் பொன்முடி... அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் துணைப் பொதுச்செயலராக நியமனம்...
சென்னையில் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்... அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் முக்கிய ஆலோசனை...
சேலம் ஆத்தூர் அருகே பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் அன்புமணி தரப்பு மாவட்ட செயலர் உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு... பாமகவினரை அழித்தொழிக்க அன்புமணி வன்முறையை தூண்டுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு...
ராமதாஸைச் சுற்றிலும் துரோகிகள் இருக்கும் வரை அவரோடு சேரமாட்டேன் என அன்புமணி திட்டவட்டம்... தந்தையிடம் இருந்து தன்னை பிரித்துவிட்டதாகவும் வேதனை...
தமிழகத்தில் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...
தமிழகத்தில் மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... மே 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு...
ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம்... நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் முண்டியடித்து செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு...
சென்னை வானகரத்தில் 9 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்... புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வெறிநாய் கடித்து 6 பேர் காயம்...
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை... தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சியில் கனமழை...
சென்னை திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் மழை... மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், புழல் பகுதிகளிலும் பரவலாக மழை...
ஜம்மு காஷ்மீரின் குல்மார்க், சோனாமார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு... மழையுடன் பனிப்பொழிவும் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
சத்தீஸ்கர் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு... ரயில்வே சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிப்பு...
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியை சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் செபு தீவு கடுமையாக பாதிப்பு... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்....
ஆசிய கோப்பை போட்டியின்போது ஃபைட்டர் ஜெட் சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப், 2 போட்டிகளில் விளையாட தடை... இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ரா, மற்றொரு பாகிஸ்தான் வீரர் சாஹிப்சதா மீதும் ஒழுங்கு நடவடிக்கை...
உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு... கேக் வெட்டியும், நடனமாடியும் மகிழ்ந்த வீராங்கனைகள்...
ஃபிடே உலக கோப்பை செஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அசத்தல்... அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெற்றி; டிரா செய்த குகேஷ், பிரக்ஞானந்தா...
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 குறைந்து 90ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை... ஒரு கிராம் தங்கம் விலை 11ஆயிரத்து 250ஆக குறைந்தது...
மீண்டும் குறையத் தொடங்கியது வெள்ளி விலை.. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 3 குறைந்து 165 ரூபாய்க்கு விற்பனை...