`தி ராஜா சாப்' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? - தயாரிப்பாளர் விளக்கம் | The Rajasaab | Prabhas
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள படம் `தி ராஜா சாப்'. இப்படம் கிராஃபிக்ஸ் சார்ந்த பணிகளின் காரணமாக, சில முறை பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சங்கராந்தி (பொங்கல்) ரிலீசாக ஜனவரி 9, 2026 படம் வெளியாகும் என சொல்லப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன. திடீரென இப்பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது என தகவல்கள் உலவி வந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாகா படத்தின் தயாரிப்பு நிறுவனம் People MEDIA -FACTORY சார்பில் T G விஸ்வபிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் "பிரபாஸ் நடிப்பில் வரவிருக்கும் பிரம்மாண்ட படமான `தி ராஜா சாப்' படத்தின் வெளியீட்டு பற்றி பரவி வரும் தொடர்ச்சியான ஊகங்களுக்கு பதிலளிக்கவே இந்த விளக்கம். 2026 சங்கராந்திக்கு (பொங்கல்) `தி ராஜா சாப்' வராது என்பது தொடர்பான அனைத்து வதந்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபடி `தி ராஜா சாப்' உலகமெங்கும் ஜனவரி 9, 2026 வெளியாகும். படத்தின் post production பணிகள் விறுவிறுப்பாக மிக உயர்ந்த தொழில்நுட்ப தரத்துடன் எந்த தாமதமும் இன்றி நடைபெற்று வருகிறது.
படம் அதன் மிக அற்புதமான வடிவத்தில் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு துறையும் சரியான ஒத்திசைவுடன் செயல்படுகின்றன. இந்த பிரம்மாண்டமான சினிமா கொண்டாட்டத்தை அதீத ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்த சங்கராந்தி கொண்டுவரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அனுபவியுங்கள். விரைவில் மிகப்பெரிய அளவில் படத்தின் புரமோஷன் வேலைகள் துவங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

