CJP Protest Pt web
இந்தியா

வெற்றிக்கண்ட கரப்பான் ஜனதா போராட்டம்.. பின்னால் இருந்து இயங்கிய தன்னார்வலர்கள் குழு!!

அக்குழுவில் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், அரசியல் அறிவியல் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

PT WEB

கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அதற்கு பின்னால் இருந்து இயங்கிய தன்னார்வலர்கள் குழு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 36 நாள் போராட்டத்தின் முகங்களாக அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் இருந்தனர். ஆனால், போராட்டத்தில் மேடை அமைப்பது முதல் ஊடகங்களுடன் தொடர்புகொள்வது வரையிலான பணிகளை, தன்னார்வலர்கள் குழு மேற்கொண்டது. அக்குழுவில் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், அரசியல் அறிவியல் மாணவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

யூடியூபர் துருவ் ராதே

யூடியூபர் துருவ் ராதே வாயிலாக இக்குழுவில் இணைந்த விஜேதா தஹியா ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஊர்ஜா மற்றும் வைஷ்ணவி ஆகியோர், தினசரி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததோடு, செய்தி தொடர்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். வைஷ்ணவி கோரிக்கைகளை தயார் செய்வதிலும் பங்காற்றியுள்ளார். சுதிர், ராம், அனாம், ஆரிப் ஆகியோர் மேடை நிர்வாகம் உள்ளிட்டவற்றை கவனித்துக்கொண்டதோடு, விருந்தினர்களையும் ஒருங்கிணைத்துள்ளனர். டெல்லியில் மாணவர்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கையே, போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக, தன்னார்வலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.