இந்திய தலைமை ஆணையர் ஆலோசனை
இந்திய தலைமை ஆணையர் ஆலோசனை புதிய தலைமுறை
இந்தியா

தேர்தல் ஏற்பாடுகள் தயாரா? - தலைமை ஆணையர் ஆலோசனை?

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உட்பட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மாநிலங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநிலங்களில் உள்ள அரசியல் சட்ட ஒழுங்கு சூழல், ஆயுத்தப்பணிகள், தேர்தல் நடவடிக்கைகள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படும். ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளும், அவரவர் மாநிலங்களின் நிலைகுறித்து தெரிவிப்பர்.

தமிழ்நாடு

இந்தியாவில் மொத்தமாக 543 தொகுதிகள் இருக்கக்கூடிய சூழலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இன்றும் நாளையும் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டுள்ள சத்யபிரதா சாகு, முதல்நாளான இன்று தமிழ்நாட்டின் தேர்தல் முன்னேற்பாடுகளையும், தேவைகளையும் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் கலந்தாலோசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அனைத்து மாநிலங்களுக்கும் நேரடியாகவே சென்று தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

முதற்கட்டமாக நடைபெற்று கொண்டுள்ள இக்கூட்டத்திற்கு பிறகு இரண்டாம்கட்ட கூட்டம் நடைபெறும். அதன்பின்னரே தேர்தல் நடைபெறும் தேதிகள் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.