பொங்கல் பண்டிகை: தாம்பரம்- கோவை சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம், கோவை, திருச்சி , பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் நேரத்தில், வெளியூர்களில் வாழும் தமிழ் மக்கள் அதிகளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால் இச்சமயங்களில் பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களில் மக்கள் அலை கூடும். அதனால் அங்கு ஏதும் சிக்கல் எழக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, பண்டிகை கால சிறப்பு பேருந்துகள், ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். அப்படி தற்போது சிறப்பு ரயில்கள் சில அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோயம்புத்தூர் - தாம்பரம் செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் ஜனவரி 16, 17 ஆம் தேதிகளிலும்,

தாம்பரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜனவரி 17, 18 ஆம் தேதிகளிலும்,

பெங்களூர்- திருச்சி பொங்கல் சிறப்பு ரயில் ஜனவரி 12 ஆம் தேதியிலும்,

திருச்சி - பெங்களூரு சிறப்பு ரயில் ஜனவரி 13 ஆம் தேதியிலும் இயக்கப்படும்” என்று அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com