petrol bank FB
இந்தியா

விரிவடைகிறதா இந்திய எரிபொருள் வினியோக சந்தை?

கடந்த 2019ம் ஆண்டில் எரிபொருள் நிலைய விதி தளர்வால் டோட்டல் எனர்ஜி, பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தன.

Vaijayanthi S

அதிகளவில் எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிமுறைகளில் தளர்வு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை, பொதுமக்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுள்ளது. பெட்ரோல் வாகனங்களை தாண்டி சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி எரிபொருள் வாகனங்கள், மின்சார எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப அந்த எரிபொருட்களை தரும் வினியோக நிலையங்கள் குறைவாகவே உள்ளது. இதை ஈடுகட்ட செய்ய புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் எரிபொருள் நிலைய விதி தளர்வால் டோட்டல் எனர்ஜி, பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தன. தற்போது அராம்கோ, பூமா எனர்ஜி போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியன், ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் 97, 804 எரிபொருள் நிலையங்களை இயக்கி வருகின்றன. இது தவிர ரிலையன்ஸ், நயாரா, ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களும் குறைந்த அளவில் கிளைகளை பரப்பி உள்ளன.

என்ன விதிகள் மாற்றப்பட்டுள்ளன?

2019 வரை, எரிபொருள் சில்லறை உரிமம் தேவைப்படும் நிறுவனங்கள் எண்ணெய் ஆய்வு, சுத்திகரிப்பு, குழாய் மற்றும் எல்என்ஜி முனையங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். சில்லறை சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்க ரூ. 250 கோடி நிகர மதிப்பு (சிஎன்ஜி, எல்என்ஜி, பயோ எரிபொருள்கள் அல்லது ஈவி சார்ஜிங் போன்ற குறைந்தது ஒரு மாற்று எரிபொருள் உள்கட்டமைப்பை மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்க வேண்டும் என்ற ஆணையுடன்) சில்லறை மற்றும் மொத்த நுகர்வோருக்கு விற்க 500 கோடி ரூபாய் நிகர மதிப்பாக மாற்ற உள்ளது. சில்லறை உரிமதாரர்கள் குறைந்தது 100 விற்பனை நிலையங்களை நிறுவ வேண்டும், அவற்றில் 5 சதவீதம் ஐந்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறங்களில் நிறுவ வேண்டும்.

இதற்கான நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மார்க்கெட்டிங் முன்னாள் இயக்குனர் சுக்மல் ஜெயின் தலைமையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைத்துள்ளது. மற்ற உறுப்பினர்கள் பி. எஸ். ரவி, இந்திய பெட்ரோலியத் தொழில் கூட்டமைப்பின் (FIPI) பிரதிநிதி, பி மனோஜ் குமார், பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (பிபிஏசி) இயக்குநர் ஜெனரல் அருண்குமார், இயக்குநர் (சந்தை), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் என அமைத்துள்ளது. மேலும் இது குறித்து அடுத்த 14 நாட்களுக்குள் பங்குதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளையும் கேட்க உள்ளது.