உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், தனது டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எலான் மஸ்க் சந்திப்பிற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் எலான் மஸ்க் தொடர்ந்து ஈட்டுபட்டு வந்தார். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அதிக இறக்குமதி வரிகள் மற்றும் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து போன்ற காரணங்களால் இந்தியாவில் டெஸ்லா கால் பதிப்பது தள்ளிப்போனது. இந்தியாவில் ஹை எண்ட் கார்களுக்கான அடிப்படை சுங்க வரி 110 சதவீதத்தில் இருந்தது. உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியாளர்களை கவரும் வகையில் அதனை இந்தியா 70 % ஆக குறைத்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியை மஸ்க் சந்திப்பதாக இருந்தது. எனவே எதிர்பார்ப்புகளும் அதிகளவில் இருந்தது. ஆனால், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது LinkedIn தளத்தில் டெஸ்லாவின் சமீபத்திய வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள், அந்நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க வேலைகளை தொடங்கியுள்ளது என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் தனது LinkedIn பக்கத்தில் customer-facing and back-end roles உட்பட 13 பணியிடங்களுக்கான ஆட்களை வேலைக்கு எடுப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது, டெஸ்லா நிறுவன CEO எலான் மஸ்க் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு வேலைக்கு ஆட்கள் எடுப்பது தொடர்பான அறிவிப்புகள் வந்துள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் முதற்கட்டமாக வேலைக்கு ஆட்களை எடுப்பதாக தெரிகிறது. Inside Sales Advisor,Customer Support Supervisor, Customer Support Specialist,Service Advisor,Order Operations Specialist, Service Manager,Tesla Advisor,Parts Advisor,Business Operations Analyst,Store Manager,Service Technician போன்ற ரோல்களுக்காக ஆட்களை தேர்வு செய்யவிருக்கிறது.