நாட்டில் சிறுவர்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், 2023-24ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் சிறுவர்களால் 11 ஆயிரத்து 890 விபத்துகள் நேரிட்டதாகக் கூறினார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 63 விபத்துகளும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 138 விபத்துகளும், மஹாராஷ்டிராவில் ஆயிரத்து 67 விபத்துகளும் நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.