சுவேந்து அதிகாரி பிடிஐ
இந்தியா

மேற்குவங்கம்| முதலமைச்சராக சுவேந்து அதிகாரி நாளை பதவியேற்பு.. 2 துணை முதலமைச்சர்கள்!

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற அமோக வெற்றிக்குப் பிறகு, இன்று (மே 8) சுவேந்து அதிகாரி அம்மாநில முதலமைச்சராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

மேற்கு வங்க சட்டமன்றத்தில் 207 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், மம்தா பானர்ஜியை பபானிபூரில் வீழ்த்திய சுவேந்து அதிகாரி முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரவிருக்கிறார்.

Amit Shah & Suvendu Adhikari

கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராக பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார். நோபல் பரிசு வென்ற மேற்குவங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளில் மாநிலத்தின் முதல் பாஜக அரசு பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் உள்ள லோக்பவனில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட சுவேந்து அதிகாரிக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amit shah & Sevendu Adhikari

இன்று முன்னதாக நடைபெற்ற சட்டமன்றக் கட்சி கூட்டத்தில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், சுவேந்து அதிகாரி அவர்களின் பெயரை முன்மொழிந்தார். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்தார்.

மேற்குவங்கத்தின் முதல் பாஜக அரசுக்கு இரண்டு துணை முதல்வர்கள் முக்கிய பொறுப்புகளை மேற்கொள்வார்கள் என கட்சி தலைவர்கள் குறிப்பிட்டனர். இதில் ஒருவர் பெண் துணை முதல்வராக இருப்பர் என அவர்கள் குறிப்பிட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களான திலீப் கோஷ், மற்றும் பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Roopa Ganguly

ரூபா கங்குலி, ஸ்வபன் தாஸ்குப்தா, அக்னிமித்ரா பால் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். நிஷித் பிரமாணிக், சங்கர் கோஷ், மற்றும் ஜெகன்நாத் சர்க்கார் ஆகியோருக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.