உச்சநீதிமன்றம் தெருநாய்கள் குறித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில், அரசு அலுவலக வளாகங்களில் ஊழியர்கள் நாய்களுக்கு உணவளிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. தெருநாய்களுக்கு தனி இடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு முரணாக அரசு ஊழியர்கள் செயல்படுவதாக நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.
தெருநாய்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்த உச்சநீதிமன்றம், தெருநாய்கள் கவனிப்பு குறித்த முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.. மேலும் தெருநாய்கள் குறித்த விசயத்தை தொடர்ந்து கண்காணித்துவரும் உச்சநீதிமன்றம், அரசு அலுவலக வளாகங்களுக்குள் அரசு ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தது..
தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கென்று தனியாக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு முரணாக அரசு ஊழியர்களே செயல்படுவதாக நீதிபதிகள் கூறினர்.
அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் வளாகத்திற்குள் நாய்களை ஊக்குவிப்பதாகவும், அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாக நவம்பர் 7ஆம் தேதி அன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.