தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது இன்று விசாரணை

நிரஞ்சன் குமார்

தேர்தல் பத்திரத்தை சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக இற்றப்பட்ட சட்ட திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

SBI

இந்நிலையில் இந்த விவரங்களை தெரிவிக்க மேலும் நான்கு மாத காலம் அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல எஸ்பிஐ வங்கிக்கு எதிராக மூல மனுதாரரான ஏடிஆர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.