இந்தியா

நீதிபதிகளின் 200% சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிக்கை

நீதிபதிகளின் 200% சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிக்கை

webteam

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளம் 200% உயர்த்துவதற்கு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான சம்பளம் தற்போது ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அறிவிக்கைப்படி இந்த சம்பளம் ரூ.2.80 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் சம்பளமும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, ரூ.2.50 லட்சமாக உயரவுள்ளது. 

இந்த உயர்வின் படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளம் 200% வரை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பள உயர்வு கடந்த 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அமலுக்கு வர உள்ளது. நீதிபதிகளுக்கான சம்பளத்தை அதிகரிக்க 7வது ஊதியக்குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.