விடி சதீசன் Pt web
இந்தியா

முதல்வராக பதவியேற்பு.. யார் இந்த வி.டி.சதீசன்? கேரள காங்கிரஸின் புதிய முகவரி

கேரள முதல்வராக 61 வயதாகும் வடசேரி தாமோதரன் சதீசன் எனும் வி.டி.சதீசன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

PT WEB

கேரள மாநில காங்கிரஸில் கடந்த கால் நூற்றாண்டாகத் தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தவர்தான் வி.டி. சதீசன். தேர்தல் பிரச்சாரத்தின் உச்சகட்டத்தில், "யூடிஎஃப் (UDF) கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கத் தவறினால், நான் அரசியலில் இருந்து விலகி ‘அரசியல் வனவாசம்' செல்வேன்" என்று அறிவித்தவர்.

விடி சதீசன்

நெட்டூரைச் சேர்ந்த வி.டி.சதீசனின் அரசியல் ஈடுபாடு கல்லூரி நாட்களிலேயே தொடங்கிவிட்டது. கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சதீசனின் தேர்தல் அரசியல் பயணம் 1990களின் இடைப்பகுதியில் அடைந்த தேர்தல் தோல்வியிலிருந்து தொடங்குகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த பலத்த அடிக்குப் பிறகு, ராகுல் காந்தியின் நேரடித் தேர்வால் எதிர்க்கட்சித் தலைவராக சதீசன் நியமிக்கப்பட்டார்.

பரவூர் தொகுதியில் ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அனுபவமும், சட்ட வல்லுநராக இவருக்கு இருந்த ஆழமான அறிவும் இவரை ஒரு வலிமையான தலைவராக மாற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்த சதீசன், தற்போது மாநில ஆட்சிக் கட்டிலிலும் காங்கிரஸை அமர வைப்பதில் வெற்றி கண்டுள்ளார். இது ஒரு திடீர் அலையல்ல, மாறாக அடிமட்டத்திலிருந்து திட்டமிட்டு அவர் கட்டியெழுப்பிய நிதானமான வெற்றி என்று கட்சித் தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர்.