பணவீக்கம் முகநூல்
இந்தியா

பணவீக்கத்திற்கு வழிவகுப்பது இதுதான்.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுப்பதாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது

PT WEB

குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக வருமானம் கொண்ட மாநிலங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்வது, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுப்பதாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிராந்திய வாரியாக ஒப்பிடும்போது, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பெரும்பாலான பருப்பு வகைகள் போன்ற பொருட்களுக்கான சில்லறை விலைகள், தென் மாநிலங்களில் அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், அதாவது 2021ஆம் நிதியாண்டு முதல் 2025 ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில், வடகிழக்கில் பணவீக்கம் 3.4 சதவிகிதமாக குறைந்துள்ள நிலையில், தெற்கில் 2.6 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல், மதுபானம், ஆட்டோமொபைல்கள் மற்றும் பிளாட்களுக்கான மறுசீரமைப்பு கட்டணங்கள் மீது விதிக்கப்படும் அதிக வரிகளும் பணவீக்கத்தை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும், எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.