தொகுதி மறுவரையறை ai
இந்தியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் மக்களவையில் நவம்பர் 30ஆம் தேதி கூடுகிறது.

Rishan Vengai

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் முடிவடையாத நிலையில், புதிய மசோதா மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒரு நாள் அமர்வாக நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் தேதி மக்களவையும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதனைத் தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ்தளப் பதிவில், அத்தியாவசியமான அரசாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களவையை 2026 நவம்பர் 30, திங்கட்கிழமையன்றும், மாநிலங்களவையை 2026 டிசம்பர் 2, புதன்கிழமையன்றும் மீண்டும் கூட்டுமாறு, மக்களவையின் மாண்புமிகு சபாநாயகரையும், மாநிலங்களவையின் மாண்புமிகு தலைவரையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இரு அவைகளின் அமர்வும் 2026 டிசம்பர் 3 அன்று நிறைவடையலாம்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மழைக்காலக் கூட்டத்தொடர், 105 நாட்களாகியும் முறைப்படி முடித்துவைக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கிடைக்காத நிலையில் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், மசோதா மீதான எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.