தென்மேற்கு பருவமழை Twitter
இந்தியா

தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை.. 13% மழைபொழிவு குறைவு!

தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மழைபொழிவு 13% குறைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மழைபொழிவு 13% குறைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட் 21 நிலவரப்படி 13% மழை குறைவாகவே பெய்துள்ளது வானிலை மைய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஆந்திரா, ஹரியாணா, பிஹார், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பற்றாக்குறை அதிகளவு உள்ளது. எனினும் ஒடிஷா, காஷ்மீரில் மட்டும் இயல்பை விட சற்றே மழை அதிகம் பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

கடந்த ஜூன் 4ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 21 வரை இயல்பான அளவில் 619 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கவேண்டிய நிலையில், 538 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. பற்றாக்குறை நீடிக்கும் பட்சத்தில் உணவு தானிய விளைச்சல் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.