சுக்பீர் சிங் பாதல் எக்ஸ் தளம்
இந்தியா

பஞ்சாப்| சுக்பிந்தர் சிங் பாதல் ராஜினாமா கடிதம் ஏற்பு..

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக இருந்த சுக்பிந்தர் சிங் பாதல், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அக்கட்சிக்கு கடிதம் அளித்திருந்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை, அக்கட்சியின் செயற்குழு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

Prakash J

சீக்கிய மதத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில், பஞ்சாப்பின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கு, அம்மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தி, தண்டனை வழங்கியது. அதன்படி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் பொற்கோயிலுக்குச் சென்று சேவைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சேவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக சுக்பீர் சிங்கிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சுக்பீர் சிங்கை சுட முயன்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சுக்பீர் சிங் பாதல்

முன்னதாக, சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக இருந்த சுக்பிந்தர் சிங் பாதல், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அக்கட்சிக்கு கடிதம் அளித்திருந்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை, அக்கட்சியின் செயற்குழு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. சீக்கிய மதத்திற்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அகால் தக்த் என்ற சீக்கிய அமைப்பின் அறிவுறுத்தலை ஏற்று, பாதலின் ராஜினாமா கடிதம் தற்போது ஏற்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.