சுதர்சன ரெட்டி, சிபிஆர், ஆசியக் கோப்பை எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES|குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்கம் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்கம் வரை விவரிக்கிறது.

  • அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

  • காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை, வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நாட்களை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலைமுதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

  • ஆதார் அடையாள அட்டையை 12ஆவது ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பீகார் சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், தான் அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்
  • டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் கணவர் மணீஷ் குப்தா, அரசு விழாக்களில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • கடும் போராட்டங்கள் மற்றும் வன்முறைக்குப் பிறகு, நேபாள அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்குவதாக அறிவித்தது.

  • இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பிற்கு, உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.

  • மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  • காஃபா கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.