புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்கலாம் என திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ப.சிதம்பரம் முதல் யு.எஸ். ஓபன் டென்னிஸில் அல்காரஸ் சாம்பியன் வரை விவரிக்கிறது.
இந்தியாவில் நேற்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 10ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் எனவும், பாஜக சதி செய்யும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய பெயர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறுகிய எண்ணத்துடன் செயல்படுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
விசிக நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்ட வழக்கில் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பதவியேற்ற ஓராண்டுக்குள் ஜப்பான் பிரதமர் இஷிபா ராஜினாமா செய்தார்.
ஆசியக் கோப்பை ஹாக்கியில் 4-0 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னரை பட்டத்தை வென்றார் அல்காரஸ்.