கனமழை, சிபிஆர் எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |இன்று கனமழைக்கு வாய்ப்பு முதல் வாகை சூடிய சி.பி.ராதாகிருஷ்ணன் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு முதல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாகை சூடிய சி.பி.ராதாகிருஷ்ணன் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு முதல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாகை சூடிய சி.பி.ராதாகிருஷ்ணன் வரை விவரிக்கிறது.

  • தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

  • சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி ஆளும் கட்சியின் அரசியல் ரீதியான தோல்வி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

  • ''ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டும்'' என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 13ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் - இளையராஜா
  • இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக தடைகளை நீக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

  • வன்முறைக் களமாக மாறிய நேபாளத்தில் ஆட்சியை கையிலெடுத்துள்ளது ராணுவம். மக்களின் பாதுகாப்பையும், சட்டம், ஒழுங்கையும் நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

  • கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் படையினர் நடத்திய திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  • ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

  • ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 17 சீரிஸை அறிமுகம் செய்துள்ளது. வரும் 19ஆம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.