கர்நாடக மாநிலம்  முகநூல்
இந்தியா

கர்நாடகா: புகார் அளிக்க சென்ற பெண்... அத்துமீறிய டிஎஸ்பி! எங்கு கிடைக்கும் பாதுகாப்பு?

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல்நிலையத்தில் காவல் துணைக்கண்காளிப்பளரான பணியாற்றி வருபவர் 58 வயது ராமச்சந்திரப்பா. இவரிடம் பாவாகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல்நிலையத்தில் காவல் துணை கண்காளிப்பளரான பணியாற்றியவர் 58 வயது ராமச்சந்திரப்பா. இவரிடம் பாவாகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க சென்றுள்ளார்.

புகார் அளிக்க வந்த அப்பெண்ணை அலுவலகத்தின் கழிவறைக்கு அருகில் உள்ள ஒருபகுதிக்கு அழைத்து சென்ற டிஎஸ்பி ராமச்சந்திரப்பா, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் வேறொரு நபரால் காணொளியாக பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டமான துமகுருவில் இந்த சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வைரலான நிலையில், ‘ஜன்னல் ஒன்றின் வெளியே இருந்து இந்த வீடியோவை பதிவு செய்யும் அடையாளம் தெரியாத நபர், அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு உதவி இருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் வீடியோ மட்டும் எடுத்துள்ளார்’ என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் மற்றொரு தரப்பினர், ‘டிஎஸ்பி மேல் இருக்கும் பயத்தால், அந்நபர் இச்சம்பவத்தை தடுக்க முயலாமல் போயிருக்கலாம்; தற்போது இதை அம்பலப்படுத்தி ஆதாரத்துடன் அப்பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்’ என்றும் கூறுகின்றனர். எது எப்படியாகினும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாவலர்களே கொடூர குற்றவாளிகளாக மாறும்போது பொது பாதுகாப்பை எப்படி நம்புவது என மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன என்பது மறுப்பதற்கில்லை.

வீடியோ வைரலான நிலையில், டிஎஸ்பி ராமசந்திரப்பாவின் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பணியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.