3 பேர் போக்சோவில் கைதுpt desk
குற்றம்
திருப்பூர்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேர் போக்சோவில் கைது
பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: சுரேஷ்குமார்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமார். இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவிநாசி பாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
arrestedPT DESK
விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் குமார், மகேஷ் குமார் மற்றும் குட்டி என்ற சிரஞ்சீவி ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.