விவாகரத்து அல்லது கொடுமை வழக்குகள் போன்ற திருமண தகராறுகளின் போது கணவன்-மனைவி இடையேயான தொலைபேசி அழைப்புகள் அல்லது தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்வது நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம் என்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.. சமீபத்தில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தில், மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டில், "எனக்கு தெரியாமல் எனது கணவரால் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது என்னுடைய அடிப்படை மற்றும் தனிப்பட்ட உரிமையை மீறியதாகும்" என்று கூறியிருந்தார்.
மனைவியின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கணவன் பதிவு செய்த மனைவியின் உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆடியோ ஆதாரம் என்பது தனியுரிமை மீறல், சட்டரீதியாக இதனை நியாயப்படுத்த முடியாது. சட்டத்தின் பிரிவு 122ன் கீழ் அது பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணைகளில் இதனைப் பயன்படுத்த முடியாது என்று கூறியது.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், திருமண உறவு சிக்கல்கள் குறித்த வழக்குகளில் தம்பதியரில் யாரேனும் ஒருவர் ரகசியமாக பதிவு செய்த ஆடியோவை சாட்சியாக ஏற்கலாம் என்று உறுதி செய்துள்ளது.
இது போன்ற இந்த தீர்ப்பு வரவேறக்கக்கூடியதா? இதனால் ஒருவரின் தனியுரிமை பாதிக்கப்படாதா? இந்த ஆதாரங்களை தொழில்நுட்பங்கள் கொண்டு மிஸ் யூஸ் பண்ணமாட்டார்களா? என பலவிதமான கேள்விகள் வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமாரிடம் கேட்கப்பட்டது.. அதற்கு அவர் அளித்த பதில்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ரகசிய ஆடியோ பதிவையும் இனி ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம் என்பது வரவேற்கதக்கதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,
”திருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளில் தம்பதி ரகசியமாக பதிவு செய்த ஆடியோ பதிவுவை சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கதுதான் என்றார்.. மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திருமண உறவு சிக்கல்கள் குறித்த வழக்குகளில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமையும்” என்கிறார் வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார்.
நீதிபதிகள் ஆடியோ பதிவை இதற்கு முன்பு எந்த வழக்குகளிலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லையா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,
”ஆம். இதுவரை நீதிபதிகள் ஆடியோ பதிவை ஏற்றுக்கொண்டதே இல்லை.. வீடியோ பதிவும் கூட மற்ற தற்கொலை வழக்குகள் மற்றும் க்ரைம் வழக்குகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.. ஆனால் கணவன் மனைவி விவாகரத்து வழக்குகளில் ஆடியோவை ஆதாரமாக ஏற்றுக்கொண்டதே இல்லை.. ஆனால் தற்போது இதை உச்சநீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுகொள்ளலாம் என்று திர்ப்பு வழங்கியுள்ளது சிறப்பான ஒன்றாகும்” என்றார்..
ரகசிய ஆடியோ பதிவு செய்வதினால் ஒருவரின் தனியுரிமை பாதிக்கப்படாதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,
”இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 122, பொதுவாக, வாழ்க்கைத் துணைவரின் தனிப்பட்ட ஆடியோகளை பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது.. ஆனால் டெக்னாஜி வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் இதையும் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொளவதில் தவறில்லை. இதைதான் பஞ்சாப்பில் நடந்த வழக்கிலும் நீதிபதி கூறியுள்ளார். வாழ்வுரிமையா?அல்லது தனியுமையா? என்றால் வாழ்வுரிமைதான் பெரிதாக எடுத்துக்கொள்ளபப்டும்” என்றார்..
ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் தவறான அல்லது பொய்யான ஆதாரங்களை கொடுக்க நேர்ந்தால் அதை எப்படி சரி பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு...
”பொதுவாகவே வாட்ஸ் ஆப் சாட், வீடியோ மற்றும் ஆடியோகளை ஆதாரமாக எடுத்துக் கொள்வது குறித்து நீதிபதிகளிடைடே ஒரு குழப்பம் நிலவி வந்தது.. அதனால் எலட்ரானிக் டிவைஸ் ஆதாரங்களை இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு ஃபார்ம் 65பி ( form 65B ) சான்று பெற்றுதான் நீமன்றத்தில் சமர்பிக்கப்படும். அந்த ஆடியோ நம்பகமானதா? என்று இந்த சரிபார்க்கப்பட்ட பின்னே நீதிபதிக்கு ஆதாரமாக வழங்கப்படும். அதனால் இதில் வேறு எந்தவிதமான பொய்யான ஆதாரங்களை சமர்பிக்க முடியாது” என்றார்..
அதனைத் தொடர்ந்து பேசியவர்,
தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்சனைகள் வந்தால் ஒன்று தற்கொலைக்கு போறாங்க அல்லது விவாகத்திற்கு போகிறார்கள்.. அதனால் விவாகத்திற்கு வரும் தம்பதிகளுக்கு சரியான முறையில் வழக்கை கொண்டு போக இந்த ஆடியோ ஆதாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. என்றார்..
மேலும், ”வரதட்சணை கொடுமை காரணமாக பல தம்பதிகள் இப்போது விவாகரத்து மற்றும் தற்கொலை செய்துக் கொண்டு வருகின்றனர்.. இந்த வழக்குகளில் வரதட்சணை கேட்பது தவறு என்றால் அதனை கொடுப்பதும் தவறு” என்றார். ஆக உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கதே” என்று வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் கூறினார்.