சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எழுத்தாளர்கள் உள்ளிட்ட 236 பேர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், சாகித்ய அகாடமிக்கான விருதுகள் இறுதி செய்யப்பட்டு டிசம்பர்18இல் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், அதனை நிறுத்திவைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு விருது அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது முக்கியமான அங்கீகாரமாக இருந்து வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,கேரள சாகித்ய அகாடமி போன்று தமிழுக்கு என பிரத்யேக ஓர் அமைப்பை உருவாக்கி படைப்பு, விமர்சனம், ஆய்வுகள், இளம் எழுத்தாளர்கள் என 4 பிரிவுகளில், ஆண்டுதோறும் சுதந்திரமான விருது வழங்கும் அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.