model image Gemini AI
இந்தியா

Momosக்கு அடிமையான சிறுவன்.. ரூ.85 லட்சம் நகையைச் சுருட்டிய வியாபாரி.. விசாரணையில் அதிர்ச்சி சம்பவம்

மோமோஸ் பலகாரத்துக்கு, 14 வயது சிறுவன் அடிமையான நிலையில், அவனிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகையைச் சுருட்டிய தெருவோர வியாபாரி போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.

Prakash J

மோமோஸ் பலகாரத்துக்கு, 14 வயது சிறுவன் அடிமையான நிலையில், அவனிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகையைச் சுருட்டிய தெருவோர வியாபாரி போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.

மோமோஸ் (Momos) என்பது திபெத், நேபாளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் பிரபலமான, ஆவியில் வேகவைக்கப்பட்ட அல்லது பொரித்த சிற்றுண்டி ஆகும். இது, மைதா அல்லது கோதுமை மாவில் காய்கறிகள், பன்னீர் அல்லது இறைச்சி நிரப்பி, சட்னியுடன் பரிமாறப்படுகிறது. இவை கொழுக்கட்டை வடிவில், சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இது, வெஜ் மோமோஸ், சிக்கன் மோமோஸ், ஃபிரைட் மோமோஸ் என 3 வகைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறுவன் ஒருவனின் மோமோ மீதுள்ள ஆசையைப் பயன்படுத்தி 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை தெருவோர உணவக வியாபாரி ஒருவர் பறித்துள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி ஒருவரின் பையனுக்கு மோமோ உணவு மீது ஆசை இருந்த நிலையில், பணம் இல்லாததால் அதை வாங்க முடியவில்லை. அப்போது, ’வீட்டிலுள்ள நகையை கொண்டுவந்து கொடுத்தால் மோமோ கொடுக்கிறேன்’ என கடைக்காரர் ஆசை காட்டியுள்ளார்.

model image

இதையடுத்து தினமும் ஒவ்வொரு நகையாக கொண்டுவந்து கொடுத்து சிறுவன் மோமோ சாப்பிட்டுள்ளான். ஒருகட்டத்தில், குடும்பத்தினர் நகையைக் காணாது அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து ராம்பூர் கர்கானா காவல் நிலையதிலும் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.