ரேவந்த் ரெட்டி  முகநூல்
இந்தியா

தமிழக அரசு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்தார்.

PT WEB

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க வரும் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக பிரதிநிதிகள் குழுவையும் அவர் அனுப்பியுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு சென்ற தமிழக அமைச்சர் கே என் நேரு தலைமையிலான தமிழக குழு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்தார்.