பிபின் ராவத் முகநூல்
இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த விவகாரம்.. வெளியான அதிர்ச்சி அறிக்கை!

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

PT WEB

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி அப்போதைய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு செல்லும் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார்.

அதில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம் என நிலைக்குழு அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தியதாகவும், அதில் நிலைதடுமாறி கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.