‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்றே அரசு செயல்படுகிறது என்ற ராகுல் காந்தியின் பேச்சால் மக்களவையே சூடானது.
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “கொரோனா வந்ததும் சென்றுவிடும் என்று அரசு கூறியது, ஆனால் அதற்கு பின் எவ்வள்வோ பிரச்னைகள் ஏற்பட்டன. உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் பேசுவதாக பிரதமர் கூறினார். ஆனால், வேளாண் சட்ட அம்சங்கள் பற்றிதான் பேசுகிறேன். மண்டி முறையை ஒழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தில் , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற முழக்கம் உண்டு. கொரோனா திரும்பவும் பல வடிவங்களில் வருவது போல், இந்த முழக்கம் பல வழிகளில் திரும்பவும் வருகிறது. நம்முடைய தேசம் நான்கு பேரால் நடத்தப்படுகிறது. அதாவது நாம் இருவர், நமக்கு இருவர். அந்த நான்கு பேரின் பெயர்கள் அனைவரும் அறிந்ததே. விவசாயிகள் பலரை அரசு பலி கொடுத்துவிட்டது. மண்டிகளையும் விற்பனை செய்துவிட்டது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களை நசுக்கும் சட்டங்களை அரசு அமல்படுத்துகிறது” என்றார்.
“விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து மட்டுமே பேசுகிறார்கள் சட்டங்கள் குறித்தும் அதன் உள்ளடக்கம் குறித்தும் யாரும் பேசுவதில்லை என்று நம்முடைய பிரதமர் தன்னுடைய உரையில் தெரிவித்து இருந்தார். அவர் பேசியதை நான் நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன்” என்று கூறி மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் காந்தி விரிவான பேசினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியபோது, ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
<iframe width="699" height="393" src="https://www.youtube.com/embed/7JF_Y5fA9ng" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>