டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்காமல் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா, அதற்கு யார் அனுமதி அளித்தார், சாதாரண உடையில் தாக்கியவர்கள் காவல்துறையினரா தன்னார்வலர்களா என விளக்கம் கோரியுள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நமது மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளைக் கேட்பதற்குப் பதிலாக தாக்குலைத்தான் அரசுநடத்தியது என்றும் ராகுல் கூறியுள்ளார். மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த அனுமதி அளித்தீர்களா என்ற வினவியுள்ள ராகுல், நீங்கள் இல்லையென்றால் வேறு யார் ஒப்புதல்அளித்தது என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரண உடையில் மாணவர்களை தாக்கியவர்கள் காவல்துறையினரா அல்லது தன்னார்வலர்களா என்று கேள்வி எழுப்பியவர், தன்னார்வலரகள் என்றால் அவர்களைப் பணியமர்த்த யார் அனுமதிஅளித்தது என்றும் வினவியுள்ளார்.