செய்தியாளர்: ஸ்ரீதர்
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக) ஆட்சியில் பாஜக-வைச் சேர்ந்த சாய் சரணகுமார் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வந்தார் இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து காலியாக உள்ள அமைச்சர் பதிவியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க உள்ளதாக கட்சி தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.