அதிமுக நிர்வாகி நீக்கம்pt desk
தமிழ்நாடு
விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகி நீக்கம் - இபிஎஸ் அதிரடி ஆக்ஷன்!
தவெக தலைவர் விஜய்க்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அதிமுக, மேற்கு மாவட்ட தலைவர் பாசறை ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல் அதிமுக மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் பாசறை மாவட்ட செயலாளரும் தற்போது மேற்கு மாவட்ட தலைவருமாக இருந்து வந்தவர் ஆனந்தகுமார். இவர், கடந்த ஜூன் 22ஆம் தேதி த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ஆனந்த குமாரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தகுமார், அதிமுகவை அழிவுப் பாதையை நோக்கி எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா பாதையில் ஆளுமை மிக்க தலைவராக விஜய் உள்ளார் என்று தெரிவித்தார்.