பேருந்து கட்டண உயர்வு pt desk
இந்தியா

புதுச்சேரி: இன்று முதல் அமலுக்கு வந்த பேருந்து கட்டண உயர்வு – எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட அரசு பேருந்து கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ரூ.3 முதல் ரூ.10 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஸ்ரீதர்

புதுச்சேரியில் கடந்த 2018ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

பேருந்து கட்டண உயர்வு

அதன்படி உள்ளூர் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை ரூ.3 முதல் 8 வரை உயர்த்தியும், தொலைதூர பேருந்து கட்டணத்தை ரூ.5 முதல் 10 வரை உயர்த்தியும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் உள்ள உள்ளூர் அரசு பேருந்து கட்டணம் 12 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் புதுச்சேரி - காரைக்கால் கட்டணம் ரூ.125ல் இருந்து 135 ஆகவும் புதுச்சேரி - சென்னை கட்டணம் 155ல் இருந்து 160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.