pm modi, rain x page
இந்தியா

PT HEADLINES | பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை முதல் கனமழை எச்சரிக்கை வரை!

இன்றைய மாலை தலைப்புச் செய்தியானது தேசப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை முதல் நவம்பர் 18ஆம் தேதி கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய மாலை தலைப்புச் செய்தியானது தேசப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை முதல் நவம்பர் 18ஆம் தேதி கனமழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

  • டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தேசப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை.. மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்பு....

  • டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது என்ஐஏ... தேடப்பட்டுவந்த சிவப்பு எஸ்யுவி கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை தகவல்....

தேஜஸ்வி யாதவ்
  • பிஹார் தேர்தலில் இண்டியா கூட்டணி வெல்வது உறுதி என முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேச்சு... பாஜக தலைமை அறிவுறுத்தல்படியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து...

  • தமிழ்நாட்டில் 78 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்... 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி படிவங்கள் விநியோகம்...

  • அமெரிக்காவில் போதுமான அளவு திறமைவாய்ந்த பணியாளர்கள் இல்லை என அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்.. ஹெச்1பி விசா மூலம் வெளிநாட்டிலிருந்து திறமைசாலிகளை அழைத்துவருவது அவசியமானது என்றும் பேட்டி..

  • நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் காவிரிப் படுகை மாவட்டங்களில் கனமழை பெய்யும்... கடலோர மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மழை
  • மஹாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில், திருமண விழாவில் மணமகனைக் கத்தியால் குத்திய நபர் தப்பியோடிய காட்சிகளை, அங்கிருந்த ட்ரோன் கேமரா தத்ரூபமாக பதிவு செய்துள்ளது.

  • ‘தேசிய தலைவர் தேவர் பெருமான்’ என்ற திரைப்படத்தில் காமராஜர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • ஊழல் குற்றச்சாட்டில் உக்ரைன் அமைச்சர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பதவி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைன் நீதித் துறை அமைச்சர் ஜெர்மன் காலஷ்ஷென்கோ இதற்கு முன்னர் எரிசக்தித் துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.