டி.கே சிவக்குமார்
டி.கே சிவக்குமார் முகநூல்
இந்தியா

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - போர்க்கால நடவடிக்கையாக கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு

ஜெனிட்டா ரோஸ்லின்

பெங்களூரில் ஏற்பட்டு வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை கையாள, அம்மாநில அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பெங்களூருவில் உள்ள அனைத்தும் தனியார் டேங்கர் லாரிகளும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், தெரிவிகையில், “அனைத்து தனியார் டேங்கர்கள் மற்றும் போர்வெல்களும் மார்ச் 7 ஆம் தேதிக்கு முன் பெங்களூரு நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (BWSSB) தங்களை பதிவு செய்யவேண்டும். குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்தகாலத்தில், பொதுமக்களிடம் அதிக தண்ணீர் கட்டணம் பெறப்படுவதை தடை செய்யும் நடைவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தண்ணீருக்காக தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .பெங்களூரு உட்பட 200 க்கும் மேற்பட்ட தாலுக்காக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. ஆகவே சுரங்கம் மற்றும் புவியியல், நீர்ப்பாசனம், காவல்துறை, போக்குவரத்து போன்ற சம்பந்தப்பட்ட துறைகளிடம் கலந்தாசித்தப்பிறகு அரசாங்கத்தின் சார்பில், இது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்படும். அனைத்து தண்ணீர் டேங்கர் சப்ளையர்கள் மற்றும் போர்வெல் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதால் பதிவு செய்யுமாறு நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

அனைத்து தனியார் தண்ணீர் டேங்கர்கள் மற்றும் போர்வெல்களின் பதிவை கட்டாயமாக்குவதன் மூலம், பெங்களூரு முழுவதும் தண்ணீர் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய அரசு முயல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.