இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

JustinDurai
ஜி 20 உச்சி மாநாடு, பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இத்தாலி மற்றும் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் 16 ஆவது ஜி 20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அதில் பங்கேற்கிறார். ரோமில், இத்தாலிய பிரதமர் மரியோவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என, இத்தாலிக்கான இந்திய தூதர் டாக்டர் நீனா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இத்தாலிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஜி 20 மாநாடு முடிந்ததும், அங்கிருந்து பிரிட்டனின் கிளாஸ்கோவுக்கு செல்லும் பிரதமர் மோடி, பருவநிலை மாறுபாடு தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.