PM Modi FB
இந்தியா

இந்திய பொருட்களை வாங்க வேண்டும்.. மக்களை வலியுறுத்தும் பிரதமர் மோடி!

உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்னை செய்ய வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

Vaijayanthi S

அமெரிக்காவின் வரி நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில் இந்திய பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களை வலியுறுத்தி வருவது கவனம் பெற்றுள்ளது. இந்திய பொருட்களுக்கு 25% வரி போடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஜவுளி போன்ற தொழில்கள் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் அமெரிக்க பொருட்களுக்கான சந்தையை இந்தியாவிற்குள் திறந்துவிடவேண்டும் நிர்பந்தம் உள்ளது.

அப்படி செய்தால் இந்தியாவில் விவசாயிகள் ,பால் பொருட்கள் தொழில் செய்வோரிலிருந்து பல தரப்பினர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இப்படி இரு முனை நெருக்கடிக்கு இடையில் உள்நாட்டு பொருட்களை வாங்க மக்கள் வாங்க வேண்டும் என பிரதமர் கூறியிருப்பது கவனம் பெறுகிறது. உலக பொருளாதாரம் நிலையில்லாமலும் நிச்சயமில்லாமலும்இருப்பதாகவும் எனவே நாடுகள் தத்தமது பொருளாதார நலனை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறதுஎன்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு பொருட்கள் சந்தையை வேகமாக வளர்க்க தேசிய அளவிலான ஒரு இயக்கம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய தயாரிப்பு பொருட்களையே விற்க மொத்த வணிகர்களில் இருந்து கடைக்காரர்கள் வரை உறுதியேற்க வேண்டுமென்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அது எங்கிருந்து வருகிறது என்று பார்த்து வாங்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்