pm modi pt desk
இந்தியா

"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல்" - பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல்களால் தங்கள் கருவூலத்தை அக்கட்சி நிரப்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

webteam

சத்தீஸ்கரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “கடந்த கால ஊழல்களால் மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தற்போது மாநிலங்களில் ஊழல் செய்து கட்சியின் கருவூலத்தை நிரப்பிக் கொண்டிக்கிறது” எனக் கூறினார். கன்கர் நகரில் பரப்புரை செய்த பிரதமர் மோடி, “சத்தீஸ்கரை முதலமைச்சர் பூபேஷ்பாகல் தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்திருக்கிறது.

con, bjp

காங்கிரசும் நாட்டின் வளர்ச்சியும் ஒருபோதும் ஒன்றாக பயணம் செய்ய இயலாதவை. 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக என்னை பாரதிய ஜனதா கட்சி அறிவித்ததும் இதர பிற்பட்ட வகுப்பினரை காங்கிரஸ் அவமதித்தது. அதே மனநிலை காங்கிரசில் தற்போது வரை நீடிக்கிறது” என குற்றம்சாட்டினார்.

சத்தீஸ்கரில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காங்கிரஸ் கமிட்டி அலுவலகமாக மாற்றி விட்டதாகவும் காங்கிரசின் ஊழல் ஆட்சியை அகற்ற மாநில மக்கள் தயாராகி விட்டதாகவும் பிரதமர் மோடி பேசினார்.