தேஜஸ்வியை விமர்சித்த பிரசாந்த் கிஷோர் web
இந்தியா

’ராகுல்காந்தி நிலைமை தான் தேஜஸ்விக்கு வரும்..’ பிரசாந்த் கிஷோர் விமர்சனம்!

ராகுல்காந்தியின் நிலைமை தான் தேர்தல் களத்தில் தேஜஸ்விக்கு நேரும் என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

PT WEB

ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோற்றதைப் போல, தேஜஸ்வி யாதவும் அவரது சொந்த தொகுதியில் தோல்வியை சந்திப்பார் என ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.

தேஜஸ்வியை விமர்சித்த கிஷோர்..

பிஹார் சட்ட சபைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் கோட்டையாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், ராகோபூர் தொகுதியில் மக்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், “ராகோபூரில் நான் போட்டியிட்டால், தேஜஸ்வி யாதவ் அவரது சொந்தத் தொகுதியிலேயே ராகுல்காந்தியைப் போல தோற்பார்” என தெரிவித்தார். இதனால், தேஜஸ்வி இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் விமர்சித்தார்.