பிரசாந்த் கிஷோர் எக்ஸ் தளம்
இந்தியா

பிரசாந்த் கிஷோர் முதல்வர் வேட்பாளர்.. ஜன் சுராஜ் கட்சியின் பிரமுகர் அறிவிப்பு!

பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் உதய் சிங் தெரிவித்துள்ளார்.

Prakash J

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ஜன் சுராஜ் அமைப்பை, கடந்த ஆண்டு கட்சியாக மாற்றினார். தொடர்ந்து கட்சிப் பணிகளிலும் வேகம் காட்டி வருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் உதய் சிங் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

தனக்கு முதல்வராக ஆசையில்லை என பல முறை வெளிப்படையாக கூறி வந்த அவர் இப்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவியில் நாட்டமில்லை என்ற தன் கருத்தை அவர் மாற்றிக்கொண்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்தாண்டு இறுதியில் அங்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது.