train accident
train accident pt desk
இந்தியா

ஆந்திர ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

webteam

ஆந்திர ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்விவி வைஷ்ணவை தொடர்புகொண்டு மீட்பு, நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

andhra pradesh

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து பயணிகள் நலனை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விரிவான விசாரணை செய்து உரிய நீதி கிடைத்திட வழி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசும் ரயில்வே துறையும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளன.