சந்திரசேகர ராவ், மோடி
சந்திரசேகர ராவ், மோடி file image
இந்தியா

”பாஜக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தார் சந்திரசேகர ராவ்” - தெலங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு

Prakash J

தெலங்கானாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாதத்துக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பிரதமர் மோடி, தெலங்கானாவில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்து உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று உரையாற்றிய அவர், ”ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றியபோது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜக ஆதரவை நாடினார். டெல்லியில் தன்னை சந்தித்த சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தார். ஆனால் நான் அந்தக் கோரிக்கையை நிராகரித்தேன். பாரதிய ராஷ்டிரிய சமிதி அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் சந்திரசேகர ராவ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்பு, சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வருவார்.

பாஜக ஆதரவு மறுக்கப்பட்டதால், சந்திரசேகர ராவ் விமான நிலையத்துக்கு என்னை வரவேற்க வருவதில்லை. தெலுங்கானா மக்கள் நிச்சயம் சந்திரசேகர ராவ் கட்சியை தோற்கடித்து பாஜக வசம் ஆட்சியை ஒப்படைப்பார்கள். அப்போது முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவோம்” என்றார்.

இதையும் படிக்க: அண்ணாமலை இல்லாத கூட்டம்: நிதியமைச்சரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?