பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று புனித நீராட உள்ளார்.
காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இடையே, பிரதமர் மோடி கும்பமேளாவில் கலந்துகொள்ள இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடைசியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரயாக்ராஜிற்கு வந்த பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.