அயோத்தி ராமர்
அயோத்தி ராமர் pt desk
இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமரின் சிலை – புகைப்படம் வெளியீடு

webteam

செய்தியாளர்: ராஜிவ்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படவுள்ள 5 வயதுடைய ராமரின் சிலையை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 சிற்பிகள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 1 சிற்பி என 3 பேர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

அயோத்தியில் உள்ள ராமர் சிலை

இதையடுத்து கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான நெல்லிக்காரி பாறையைக் கொண்டு 7 மாதங்களாக அயோத்தி வளாகத்தில் உருவாக்கப்பட்ட ராமரின் சிலை, ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கண்களை மட்டும் துணியால் கட்டியபடி சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் சிலையின் முதல் புகைப்படம்

கும்பாபிஷேக தினத்தன்று கண்கள் திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் என அயோத்தி அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்றைய தினம் அயோத்தி ராமர் கோயிலை நேரில் சென்று பார்வையிட்டார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்